அந்நாட்களில் கஞ்சி நாளாந்த உணவாக உங்களுக்கு வழங்கப்படவில்லை வாரத்தில் இரண்டு நாட்கள் உங்கள் போஷாக்கிணை கருத்திற்கொண்டே வழங்கப்பட்டது.நானும் அவற்றைத் தான் உண்டு இவர்களுக்கு சேவையாற்றினேன்.
முகாம்களில் தங்க வைத்த மக்கள் உணவிற்காக அல்லல் படவில்லை.”Plumpy Nut”எனும் சத்துமிக்க Chocolat பைக்கட்டுக்கள் கூட போதியளவு வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டது. MSF,SLRC,ICRC மற்றும் பொது அமைப்புகள், திருச்சபைகள் என இன்னும் பல அமைப்புகள் இணைந்து மக்களுக்கு தேவையான வசதிகளை போதுமானளவில் வழங்கிக் கொண்டு தான் இருந்தார்கள்.
கஞ்சிக்காக காத்திருந்தது தமது உயிரை பாதுகாத்துக் கொள்ள குழந்தைகளுடன் தப்பித்து இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் செல்ல முயன்ற மக்களை தங்களுடைய பாதுகாப்பிற்காக சுட்டுச் சுட்டு பணயக் கைதிகளாக வைத்து புலிகள் தான் நாளாந்தம் இம்மக்களுக்கு கஞ்சியையே ஒரு உணவாக வழங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் தான் என் (ஞானப்பெற்றோர் குடும்பத்துடன் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கடல் வளியாக செல்ல முற்பட்டவேளை புலிகளால் சுடப்பட்டு தந்தையும் மகனும் அவ்விடத்திலே உயிர்பிரிந்தனர் எஞ்சியவர்கள் தற்போது புனர்வாழ்வு பெற்று ஊரிலும் வெளிநாட்டிலும் வசிக்கின்றனர்.)
கடைசியில் அம்மக்களை உங்களை நாம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப் போகின்றோமென கூறி மினிவான்களில் ஏற்றி கதவுகளைப் பூட்டிவிட்டு ஒன்றுமறியா அந்த அங்கவீனமானவர்கள் உட்பட அனைவரையும் பாரிய குண்டுகளை வெடிக்கப்பண்ணி அழித்துவிட்டே இன்று வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலுமிருந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி என அனுஷ்ரிக்கிறார்கள்.
அரசியலுக்காக சும்மா சும்மா புரளிகளை பரப்பிவிடக்கூடாது.உண்மையில் நாம் துணுக்காயில் தான் மே 18 இல் கஞ்சி காய்ச்சி எம் மக்களுக்கு படைக்க வேண்டும் ஏனெனில் 1990 களில் 4000/ இற்கும் மேற்பட்ட எம்மக்களை புலிப் பயங்கரவாதிகள் துணுக்காயில் சித்திரவதை முகாம் அமைத்து பாரிய சித்திரவதைகளைப் புரிந்து கால்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு ஒரு நேரச்சாப்பாட்டுடன் ரயர்களைக் கொழுத்திப் போட்டும் துவக்கினால் சுட்டும் துடிக்கத் துடிக்க கொலை செய்தார்கள்.
எனவே முதலில் அங்கு உங்கள் பானைகளை அடுப்பிலேற்றி கஞ்சிகளைக் காய்ச்சி அந்த ஆத்துமாக்களின் தாகத்தைத் தணியுங்கள் அங்கே ஒரு நினைவுத்தூபியையும் அமைத்துக்கொள்ளுங்கள் உங்கள் எதிர்கால சந்ததியேனும் நின்மதியாக வாழ்ந்து விட்டுப் போகட்டும் அதை விட்டு தேவையில்லாத பிச்சைப் பணத்திற்கும் சாப்பாட்டுப் பாஷல்களிற்கும் நாட்கூலியாக பொய் வேஷங்களுக்கு துணைபோகாதீர்கள்..மே 18 வாருங்கள் துணுக்காயில் கஞ்சி காய்ச்சுவோம்.