உணவுக் கடை நடாத்தும் முஸ்லீம்கள்

அரசின் முக்கிய செயற்திட்டங்களுக்குள் ஒன்றாக எப்போதும் இருப்பது இரண்டு சிறுபான்மை இனங்கள் இணைந்து விட்டால் தமக்கு தலையிடி என்பதே.

அதற்காகவே வருடா வருடம் ஒவ்வொரு வடிவில் பிளவை அதிகரிக்கும் செயற்திட்டங்களைச் செய்து கொண்டே இருப்பார்கள்.

முஸ்லீம்களின் மரபணுவில் வர்த்தகம் என்பது தலைமுறை தலைமுறையாக ஊறிப் போன ஒன்றாகும். எந்த தொழிலில் கை வைத்தாலும் அதை ஒற்றுமையாக வெற்றிகரமாக அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பார்கள்.

அதன் ஒரு கட்டம் தான் நுகர்வோர் கவனிப்பாகும்.உண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவர் மீன்பிடிக்க போய் உழைப்பதை விட சாப்பாட்டுக்கடை போட்டால் அதிகமாக உழைக்கலாம் என்ற நிலை இருக்கும் போது எதற்காக கடலுக்குள் போய் Risk எடுக்க வேண்டும்.

எனக்குத் தெரிய யாழ்ப்பாணம் மற்றும் நெல்லியடி பட்டணப்பகுதிகளில் மதிய நேர உணவுக்காக தமிழ் கடைகளுக்கு போவோரை விட முஸ்லீம்கடைகளுக்கு போகின்றவர்களே அதிகம்.

ஒரு பிரதேசத்தின் வளப்படுத்தலில் அப்பிரதேசத்தில் இருக்கும் சமூகங்களுக்குள் சகோதரத்துவம் என்பது அவசியமானதாகும். அதைச் சிதைப்பதால் பாதிப்பு அச் சமூகத்தில் வாழ்பவர்களுக்குத் தான்.

Leave a Reply