நாளின் மிகுதி 16 மணி நேரத்தில் 8 மணி நேரம் நித்திரை என்று ஓய்வாகவும் அடுத்து 8 மணித்தியாலம் அவர்களுக்கு பொழுது போக்கு கொண்டாட்டங்கள் சமூக செயற்பாடுகள் என்றான அவருக்கான தேவைகளின் அடிப்படையிலான செயற்பாடாக ஒரு சமூகம் நகர்த்தலே சரியானது.
இதனை பல்வேறு போராட்டங்களின் பின்பு 1800 களின் இறுதியில் உலகம் ஏற்றுக் கொண்டு ஒரு நாளிற்கான உயர்ந்த பட்ட வேலை நேரம் 8 மணி என்றாக சட்டங்களும் சமூகக் கட்மைப்புக்களும் ஏற்றுக் கொண்டன.
இதன் அர்த்தம் ஒருவர் நாளொன்றிற்கு 8 மணி நேரம் வேலை செய்தால் அதில் கிடைக்கும் வருமானம் அவர் வாழ்வை திருப்த்தியாக கொண்ட செல்வதற்கு போதுமானதாக அமைய வேண்டும்.
கூடவே வாரம் 5 நாள் வேலை. நாள் ஒன்றிற்கு 8 மணி நேரம் வேலை என்பது உறுதி செய்யப்படவும் வேண்டும் என்பதுவும் இதற்குள் அடங்கித்தான் அந்த சட்டம் அமைக்கப்பட்டது.
ஆவணங்களில் வேலை நேரம் 8 மணி என்றாக ஏற்றுக் கொண்டாலும் உண்மையில் 8 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் தனது வாழ்வை கொண்டு செல்வதற்குரிய வருமானத்தை பெறும் நிலமை இன்று உள்ளதா என்றால் இல்லை என்பதே பதில்.
அதுதான் முதலாளித்துவ பொருளாதாரம் தனக்குள் உருவாக்கிக் கொண்ட சுரண்டல்களுக்கான பொறி முறையாகும்.
ஆனால் சோசலிச பொருளதாதாரத்தில் கொள்கை அடிப்படையில் இந்த 8 மணிநேரம் மட்டும் வேலை செய்தால் நிறைவாக வாழ்வதற்குரிய முழுமையான வாய்ப்புகள் உண்டு.
அது இன்று 8 மணி நேரத்திற்கு குறைவாக ஒரு நாள் வேலை செய்து ஆனால் 8 மணி நேரத்திற்கு கிடைக்கும் ஊதியம் கிடைக்குமாறு அமைய வேண்டும் என்றான கருத்தியலை நோக்கி வளர்ச்சியடைந்த தொழில் நுட்பம் நிறுவி இருந்தாலும் இதனை நடைமுறைக்கு கொண்டுவராது வேலை இழப்புகளை ஏற்படுத்தும் சுரண்டல்களே அதிகம் ஏற்பட்டும் இருக்கின்றது.
‘திறமையிற்கு ஏற்ற வேலை தேவைக்கேற்ற ஊதியம்’ என்பதுதான் இதற்கான ஒரே தீர்வாக அமைய முடியும். இதனைத்தான் சோசலிசம் சமூகக் கட்டமுhனம் வலியுறுத்துகின்றது.
இதனை வலியுறுத்தி அதனை நடைமுறைப்படுத்த தயாராக இல்லாத எந்த நாடும் அரசம் சமூகக் கட்மைப்பும் தாம் நியாமான பார்வையை உழைப்பு சம்மந்தமாக கொண்டிருக்கிறார்கள் என்று கூற முடியாது.
இதனை அடைவதற்கு இன்றுவரை நாம் போராடிக கொண்டுதான் இருக்கின்றோம்.
அனைவருக்குமான நிறைவான வாழ்வு என்பதை உறுதி செய்யும் 8 மணி நேர வேலை வாரத்தில் இருநாள் விடுமுறை என்றாக கடந்து போகும் வாழ்கையை உறுதிப்படுத்துவதற்கு நாம் இந்த மேதினத்திலும் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அதனை நிறுவதற்கான சமூக கட்டுமானத்தை உருவாக்குதல் என்றாகவே நாம் மே தினத்தை கருத்தில் எடுத்தாக வேண்டும்.
உலக மயமாக்கல் மனிதனை ஓய்வு எடுக்காமல் 8 மணி நேரத்தை தாண்டியும் வருமானத்தைப் பெறுவதற்காக ஓட வைக்கின்றது. இதுதான் உலக பெரும்பான்மையான மக்களின் நிலை.
இது சரிதானா என்றால் இல்லை என்பதே பதில்.
ஓய்வு வயதை மீறியும் அவர்களின் இயலுமையிற்கு அப்பால் உந்தித்தள்ளும் செலவீனங்களை உலக ஒழுங்கு மேலும் மேலும் ஏற்படுத்தித்தான் வருகின்றது.
மூலதனமும் அதுசார்ந்த பணமும் சொத்துக்களையும் இந்த 8 மணி நேரத்திற்கு மேலான உழைப்பை தொழிலாளர்களிடம் சுரண்டிச் சேர்தவைதான்.
இந்த மூலதனம் உண்மையில் இந்த திரட்சி தொழிலாளர்களின் சொத்துத்தான் ஆனால் அதனை சுரண்டித் திரட்டிய முதலாளிகள் அதனைப் பகிரத் தயாரக இல்லை.
மாறாக இவர்கள் யாவரும் தங்கள் தமது வாழ்வின் தேவைகளுக்கு அப்பால் சொத்துகளை குவித்து கழிப்பறையிற்கு தங்க முலாம் பூசி அதில் பெருமை காணும் வாழ்வை தொடருகின்றனர்.
இதனை முதலாளித்துவ சித்தாந்தம் பெருமையாகவும் ஆதரித்தும் வருகின்றது.
அது இன்று கியூபா போன்ற சோசலிச கொள்கைளை பின்பற்றும் ஒரு சில உலக நாடுகளைத் தவிர உலிகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள முதலாளிகள் மேற் கூறியவற்றை மேற்கோண்டுதான் வருகின்றனர்
இந்த பொருhளதாரச் சம நிலை அற்ற தன்மைதான் இன்றைய வறுமையிற்கு கஸ்டங்களுக்கும் பிரதான காரணம் ஆகும்.
யுத்தங்களுக்கும் அழிவுகளுக்கு நாடுகளை பிடிப்பதற்கும் தமது கௌரவங்களை காப்பாற்றவும் ஆயதப் புகையாக செலவு செய்யும் நாடுகள் இதிலிருந்து விடுபட்டு தேவை உள்ளவர்களுக்கு யுத்தளில் கரியாக்கும் வளத்தை சமான்ய மக்களின் வாழ்வு சிறக்க வழங்கும் மன நிலையில் இல்லை.
இதற்கு உலகில் தலமை தாங்கும் நாடாக மற்றை எவரையும் விட அமெரிக்கா முன்நிலையில் உள்ளது.
இந்த ஏக போக முதலாளித்துவத்தை கேள்விக்கு உள்ளாக்கும் ஏதாவது ஒரு செயன்முறையை தமது நாட்டிற்குள்ளும் வெளியேயும் அது தனி நபராக…. சமூகமாக அமைப்பாக… நாடாக… ஏதாவது ஒரு சமிக்கை காண்பித்தால் அதனை அழிப்பதற்கு பல வருடம் திட்டம் போட்டுச் செயற்படும் செயற்பாடுகளை வேலைத் திடங்களை அமெரிக்கா தொடர்ந்து வருகின்றது.
இதன் இறுதி மூலவராக உள்ளவரே இன்றைய அமெரிக்க ஆளும் வர்கத் தலைவர் ஆவார்
இன்றைய போரிற்குள் இருக்கும் சூட்சமம் இதுதான்
அது அண்மையில் வெளிப்படையாக வெனிசுலாவிலும் இனிவரும் நாட்களில் கியூபா என்றான மிரட்டல்களின் வடிவங்கள் இதுதான்.
சமான்ய மக்கள் 8 மணி நேர வேலையுடன் கொண்டாட்டமா நிறைவாக தமது வாழ்வை உலகெங்கும் நிலை நிறுத்த… அது ஏற்படும் வரை மே தினத்தை அதற்குரிய அர்த்தத்துடன் செயற்படுத்துவோம்.
உலகத் தொழிலாளர்களே மே தினம் கொண்டாட்ட நாளாக இல்லாது தொடர்ந்தும் உழைக்கும் உரிமைகளுக்காக போராடுவதற்குரிய விழிப்புணர்வையும் ஐக்கியத்தையும் போராட வேண்டி தேவையை வலியுறுத்தும் நாளாக எம்மை தயார்படுத்தலுக்காக ஒன்றிணைவோம்.