லலித் அம்பன்வில.

மகிந்தானந்த மாதிரி பெரும் திருடர்கள் எல்லாம் சிறை செல்வதும் இன்னும் பலர் சிறைக்குச் செல்ல வரிசைகட்டி நிற்பதும் இதே மாதிரியான முதுகெலும்புள்ள அரச அதிகாரிகளால்தான்.

மிகுந்த நேர்மையுடனும் , அலாதியான துணிச்சலுடனும் மகிந்தானந்தவிற்கு எதிரான கரம் போர்ட் வழக்கைக் கொண்டு செல்லத் துணை போனவர்தான் அசிட் வீச்சுக்கு இலக்காகி தன் அழகு வதனத்தை இழந்த லலித் அம்பன்வில

மகிந்தானந்தவிற்கு எதிராக ஜேவிபி உறுப்பினர் வசந்த சமரசிங்க 2015ம் ஆண்டு FCID எனப்படும் பொருளாதாரக் குற்றப் பிரிவில் தொடுத்த வழக்கில் பார்வை பறிபோன கண்ணுடன் , வசந்தவிற்கு அத்தனை ஆவணங்களையும் கொண்டு போய்ச் சேர்த்தவர் இவர்.

அப்போது பிரதமராய் இருந்த ரணில் விக்ரமசிங்க , சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பாவித்து இத்தகைய அத்தனை வழக்குகளையும் மூடிமறைத்து விளையாடி டீல் போட்ட போது, FCID இற்கும் , அநுரகுமாரவிற்கும், ஜேவிபி இற்கும் , முறைகேடுகள் மற்றும் ஊழலுக்கு எதிராகப் பேசியவர்களுக்கும் சேறு பூசப்பட்ட போது என்றைக்காவது ஒரு நாள் நீதி வெல்லும் என்றும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் துளி நம்பிக்கையாவது ஏற்பட லலித் அம்பன்வில போன்ற அதிகாரிகள் தான் காரணம்.

முகத்திற்கு வீசப்பட்ட அசிட் வீச்சால் பார்வையை இழந்து எலுபெல்லாம் உருகிப் போனாலும் நேர்மையான அரச சேவையில் இருந்து கடைசியில் உயிரழந்த லலித் அம்பன்விலவிற்கு இன்று நீதி நிலைநாட்டப்பட்டது.

(Ceylon Times)