யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கான குடிநீர் விநியோகப் பிரச்சினைக்கான தீர்வாக “A River for Jaffna” என்ற திட்டத்தை மீளத் திறப்பது என்பது முற்றிலும் தவறான கருத்தாகும். இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் குடிநீர் வழங்கல் அல்ல; மாறாக, தீபகற்பத்தின் நில உற்பத்தித் திறனை உயர்த்துவதே ஆகும்.1940களில் புகழ்பெற்ற பொறியாளர் இ. சு. ஆறுமுகம் அவர்கள் இந்தத் திட்டத்தை முன்வைத்தார்.
