அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், விசிக தோழர்களுக்கும்…

இது ஒரு லும்பன் கும்பலின் கேளிக்கை மட்டுமே.அதற்கு ஒரு பகுதி மக்கள் பலியாகி இருக்கலாம்.அதை சரிப்படுத்தும் பெரும் கடமை உள்ளது.திராவிடக்கட்சிகள் குறித்த விமர்சனங்களை எவ்வித தயவுதாட்சயமின்றி முன் வைப்பதை விசிகவோ, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளோ கைவிட வேண்டியதில்லை.

அது ஆரோக்கியமான அரசியலை மேலும் முன்னெடுக்க வழி வகுக்கும்.தவெக என்பது பாஜகவின் தொங்கு சதை.தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்கும் என்ற முடிவை எடுப்பதும், கைவிடுவதும் விசிகவின் உரிமை. ஆனால் விசிகவின் வளர்ச்சியில் அக்கறை உள்ள ஒருவனாக எனது தாழ்மையான கருத்து யாதெனில், அமைச்சரவையில் விசிக பங்கேற்க முடிவெடுத்தால் அது மிகப்பெரிய வரலாற்றுப்பிழையாக அமையும் என்பதை கவனப்படுத்துகிறேன்.

விசிகவின் எதிர்கால வளர்ச்சிக்கு அது எவ்வகையிலும் பயனளிக்காது.திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்பதற்கான அழுத்தமும் இது அல்ல. அதுவும் விசிகவின் அரசியல் நிலைபாடுக்கு உட்பட்டதே.

நீங்கள் அரசியலில் தேர்ந்தவர் தான்.சுயநலன் அற்ற பொதுநலனை முன்னெடுப்பவர் தான்.அதற்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் தான்.அந்த நேர்மையான அரசியலின் மீது பெரும் களங்கம் வந்துவிடக்கூடாது என்ற அக்கறையிலிருந்தே இதைப் பதிவு செய்கிறேன்.சூர்யா சேவியர்20-05-26

Leave a Reply