அமெரிக்க தளங்கள் மீது பதில் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கிழக்கிலுள்ள முக்கிய தளங்களில் இருந்து அமெரிக்கா தனது பணியாளர்களை வெளியேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அத்தோடு, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கி போன்ற நாடுகளிடம் ஈரான் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. 
 
அமெரிக்கா தமது மண்ணைப் பயன்படுத்தி ஈரானைத் தாக்கினால், அந்த நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.