விவாதத்தின் முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார்.
இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் அவசரகாலநிலையை நீடிப்பதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 08வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே -100 மேலதிக வாக்குகளினால் அங்கீகாரமளிக்கப்பட்டது.
இதில் அவசரகாலநிலையை நீடிப்பதற்கு ஆதரவாக அரசாதரப்பினர் வாக்களித்த நிலையில் எதிராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக்கட்சி . ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் ஆகிய காட்சிகள் எதிர்த்து வாக்களித்தன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக முன்னணி . ஐக்கிய தேசியக்கட்சி, தொழில் கட்சி, அர்ச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சைக்குழு 17ஆகிய கட்சிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.