ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சீன சைபர் உளவாளிகள் நியமனம்

சமூக ஊடகங்களில் கிளர்ச்சிகள்  ஏற்படுவதைத்தடுப்பதே இதன் நோக்கம்  என்று மேற்கத்தைய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஆதாரம் ஒன்றின்படி சீனா தலிபான்களை வழிநடத்தி வருகிறது என்று தெரிவித்தது.

சைபர் உளவாளிகள் நியமனமானது  தலிபான்களுக்கு மிகுந்த சக்தியையும் முழு நாட்டையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய நிலையையும் ஏற்படுத்தும். தலிபான்கள் வேட்டையாடும் நபர்களான முன்னாள் அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகள், மற்ற வலைத்தளங்களுடன் கொண்டுள்ள தொடர்புகளைக் கண்டறிய உதவும்.

தேசிய எதிர்ப்பு முன்னணி (National Resistance Front) மற்றும் பெண்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் போன்ற குழுக்கள் பெரும் ஆதரவைப்பெறும் என்று தலிபான் தலைவர்கள் அச்சமடைகின்றனர்.

இவர்களின் போராட்டங்களை தலிபான்கள் ஏற்கனவே தடை செய்துள்ளனர். சீனா தனது நாட்டில் உள்ளதைப் போன்று கண்காணிப்பு அமைப்புகளை நிறுவுமானால் தலிபான்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிகாரத்தை செலுத்தும் நிலைமை உருவாகும் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.