இணையவழி நிதி மோசடி : சீனா ,வியட்நாம் பிரஜைகள் கைது

காலி திசாபதி பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட அதிநவீன ஸ்மார்ட் கைபேசிகள் 84, மடிக்கணினி 01, கணினி 01 கைப்பற்றியுள்ளனர்.

பூஸா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து, காலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த விசேட தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர். குறித்த வெளிநாட்டவர்கள் நீண்டகாலமாக இந்த வீட்டை வாடகைக்கு பெற்று தங்கியிருந்து, இணைய வழி ஊடாக பல்வேறு நிதி மோசடிகளை செய்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக போத்தல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.