இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் தற்போது தளர்த்தப்பட்டிருக்கும் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள், ஜூலை 19 வரை நீடிக்கப்பட்டன அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து, நாளை 5ஆம் திகதி முதல், 14 நாள்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மறு அறிவித்தல் வரை காத்தான்குடி தபாலகம் மூடப்பட்டுள்ளது.

காத்தான்குடி தபாலகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் மற்றுமொரு ஊழியருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், காத்தான்குடி தபாலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில், இன்றுக்காலை 6 மணியுடன் முடக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில், களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மஹவஸ்கடுவ தெற்கு முடக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில், பெரியக்கல்லாறு- 2, பெரியக்கல்லாறு-3 மற்றும் பெரியக்கல்லாறு -3 தெற்கு ஆகிய பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரமத்த தெற்கும் முடக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, கண்டி மாவட்டத்தில் கட்டுக்கஸ்தோட்​டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகராதெனிய பிரதேசம், இன்றுக்காலை 6 மணிமுதல் முடக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.