இலங்கை: கொரனா செய்திகள்

60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 27 இலட்சத்துக்கு 51 ஆயிரத்து 116 பேர் ஆவர். அதனடிப்படையில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 14 இலட்சத்துக்கு 96 ஆயிரத்து 904 பேர் ஆவர்.

இவர்களில், 1 கோடியே 8 இலட்சத்துக்கு 71 ஆயிரத்து 332 பேர், முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். இது 94.56 சதவீதமாகும்.

இரண்டாவது தடுப்பூசியை 26 இலட்சத்து 99 ஆயிரத்து 350 பேர் மட்டுமே, ஓகஸ்ட் 7ஆம் திகதி வரையிலும் பெற்றுக்கொண்டுள்ளனர். இது 23.48 சதவீதமாகும்.

கொழும்பு மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலானோர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். ஆகக் குறைவாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே பெற்றுக்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்த சனத்தொகை 98 ஆயிரம் பேர், இவர்களில் 44,738 பேர் முதலாவது தடுப்பூசியையும், 1,050 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் ஏற்றிக்​கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் நேற்று சனிக்கிழமை 75 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் சுவாமி இருவர் உட்பட 42 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து,  மிஷன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சம்மாந்துறை சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சிறுவர் இல்லம் ஒன்றில் முகாமையாளர் மற்றும் ஆறு சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் இல்லத்தில் 10 சிறுவர்களே இருந்துள்ளனர். அந்நிலையில், அங்கு பணிபுரியும் காரைதீவைச் சேர்ந்த இல்ல மேற்பார்வையாளருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவர் அன்டிஜன் சோதனை செய்துகொண்டார்.

இன்போது, அவருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. அதனையடுத்து சுகாதாரத் துறையினர், அவரை அட்டாளைச்சேனை ஆயுர்வேத கொவிட் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்  தலைமைக் காரியாலயமான கொட்டகலை சி.எல்.எப் இல் பணியாற்றிய, அறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேற்படி காரியாலயத்தில் ஏற்கெனவே 2 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, அங்கு பணிபுரிந்த மேலும் 13 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை எடுக்கப்பட்டபோதே இன்று(8)  ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.