இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இதனால் ஏற்படும் மின்னல் ஆபத்துகளை குறைக்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மின்னல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க, மரங்கள் மற்றும் உயரமான பொருட்களுக்கு அருகில் நிற்பதைத் தவிர்க்கவும், மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை குறைக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.