ஓமந்தையில் ஒருவர் படுகொலை

இக்கொலைச் சம்பவத்தில் மரணமடைந்தவர் நாவற்குளம், ஓமந்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.

மரணமடைந்தவரின் தாயாருக்கும் உறவினர்கள் குழுவொன்றுக்கும் இடையில் நாவற்குளம் கோவிலுக்கு அருகில் ஏற்பட்ட தகராறைச் சமரசம் செய்ய முற்பட்டபோதே, அந்த உறவினர்கள் குழுவில் இருந்த நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக்கொலையைச் செய்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பலியானவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் சடல அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply