கடும் வெயிலால் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை

வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் பல மாடுகள் மயங்கி வீழ்ந்துள்ளன. ஒரு சில மாடுகள் உயிரிழந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்த போதிலும், அவை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும், வெயிலின் தாக்கத்தால் மயங்கி வீழும் மாடுகளுக்கு, அந்தந்த இடங்களுக்கே நேரில் செல்லும் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி, அவசர சிகிச்சைகளை அளித்து அவற்றை ஆபத்திலிருந்து காப்பாற்றி வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக வெப்பம் காரணமாகப் பால் உற்பத்தி குறைவடைதல் மற்றும் சினை மாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படுதல் போன்ற சிக்கல்களும் எழுந்துள்ளன.

எனவே, கால்நடைகள் போதிய அளவு நீர் அருந்துவதை உறுதிப்படுத்துமாறும், கடும் வெயில் வேளைகளில் வெட்டவெளிகளில் மாடுகளைக் கட்டி வைப்பதைத் தவிர்க்குமாறும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.