மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது இன்றைய தினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் லோக பிரகாசம் ரமணன் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துவிட்டு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதன்போது சபையின் உப தவிசாளரும் வெளிநடப்பு செய்தார்.