வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக சிவசேனை அமைப்பினரால் திங்கட்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.