கோட்டாபய முகாமை அகற்றக்கோரி பிரேரணை

முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமஅலுவலர் பிரிவின் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமை அகற்றி, அந்தக் காணிகளை மக்களுக்கு வழங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரேரணையொன்று, வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. இதன்போது, ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்தார்.

தனியாருக்குச் சொந்தமான 379 ஏக்கர், அரசாங்கத்துக்குச் சொந்தமான ஆனால் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த 247 ஏக்கர் காணிகள் என மொத்தம் 626 ஏக்கர் காணியில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகளை விடுவிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் முகாம் அகற்றப்படவில்லை.