சஜித் அணியில் மேலும் இருவர் இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் அசோக சேபால தனது அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரொவபொத்தானை அமைப்பாளர் அனுர புத்திக்கவும் தனது அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த அலுவிஹாரே, தம்புள்ள பிரதான அமைப்பாளர் சம்பிகா விஜேரத்ன மற்றும் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே ஆகியோர்   ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை (24) அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.  

மத்துகம பிரதேச சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குழு ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவை வெளிப்படுத்தியது.

நாரவில சமித்தவன்ச தேரர் மற்றும் சுயேச்சை குழு 1 தலைவர் கசுன் நிரோஷன முனசிங்க, விஜித தர்ஷனி குமாரி டி சில்வா மற்றும் சமிலானி ருவன்திகா ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தனர்.

அவர்கள் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்   சஜித் பிரேமதாசவை சந்தித்து தங்கள் ஆதரவை ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தனர்.