சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கைது

அதன்படி, இலங்கை கடற்படை வெத்திலைகேனி நிலையம், இலங்கை கடற்படை கப்பல் கோத்தபய,பெரகும்பா, விஜயபா மற்றும் கடற்படை தளம் ஆகியவற்றினாலும் மீன்வள ஆய்வாளர் காரியாலயத்தின் உதவியுடனும் கடற்படையினர், இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 38 நபர்கள் 08 சட்டவிரோத வலைகள், 12 டிங்கிகள் மற்றும் மின் விளக்கு உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடி டிங்கிப் படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிண்ணியா, திருகோணமலை மற்றும் கோட் பே ஆகிய இடங்களில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகங்களுக்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.