சிரியா பற்றி ட்ரம்ப் புதிய அறிவிப்பு

ட்ரம்ப்-இளவரசர் சல்மான்-அகமது அல்-ஷாரா ஆகியோர் இடையிலான சந்திப்பில், துருக்கி ஜனாதிபதி எர்டோகன், தொலைபேசி அழைப்பு மூலம் கலந்துகொண்டார்.

பின்னர், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ”சிரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த தடை, சிரியாவை முடக்குவதாக இருந்தது. தடையை நீக்குவது சிரியாவுக்கு புதிய தொடக்கமாக அமையும். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர்தான் இந்த முடிவு எடுக்க காரணம்” என்று கூறினார். 

பொருளாதார தடை நீக்கம் குறித்த ட்ரம்ப் அறிவிப்பை சிரியாவில் அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.