சிறீதரனின் சிறுபிள்ளை தனமும் சந்திரகுமாரின் செல்வாக்கும்

கிளிநொச்சியை வசித்த தன் குடும்பத்தை பா.உறுப்பினர் ஆனவுடன் யாழ்ப்பாணத்தில் வீடெடுத்து மாற்றினார் மனைவிக்கு பாராளுமன்றத்தால் வழங்கப்படும் பதவியை எடுத்துக்கொடுத்து வீட்டில் இருத்தினார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான இடைவெளியில் மனைவி வட்டக்கச்சி ம.விக்கு கற்பிக்க வேண்டிய சூழல் வந்தபோது இரண்டு மாதங்களுக்காக கல்வியங்காட்டுக்கு இடமாற்றம் செய்து கொண்டார். சிறீதரனின் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர்.
சென்னையில் ஒரு வீட்டோடு காணி வாங்கியுள்ளார்.


கிளிநொச்சி மாவட்டத்துக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவதை சிறீதரன் விரும்புவது இல்லை.
அப்படி அவர்கள் வந்து நடவடிக்கையில் ஈடுபட ஒத்துழைப்பவர்கள் தேசத்துரோகிகள். இதன் காரணமாக கடந்த ஐந்து வருடத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் அபிவிருத்தி நிதியை பெறமுடியாமல் போய்விட்டது. ஆனால் சிறீதரனால் சந்திரகுமாரை எதுவும் செய்ய முடியவில்லை.

தற்பொழுது சந்திரகுமாருக்கு கிளிநொச்சியில் மீண்டும் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. சிறீதரனின் ஆளுமையின்மை அதற்கு காரணம். சிறீதரனிடமிருந்து பொன்.காந்தனின் பிரிவும் ஈ.பி.டி.பியில் இருந்து சந்திரகுமார் பிரிவும் சிறீதரனுக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.