சர்வதேச சட்டம் என்பது வெறும் பலவீனமானவர்களுக்கு மட்டும்தானா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், லெபனானில் மடியும் அப்பாவி மக்களின் உயிர்களை விட, வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணைதான் உலக நாடுகளுக்கு முக்கியம் என்றால், ஈரான் அந்த நீரிணையை மூடுவதை தான் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“அந்தச் சனியன் பிடித்த நீரிணையை விட ஒரு மனித உயிர் ஆயிரம் மடங்கு மதிப்பு வாய்ந்தது” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளமை உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.