‘தலிபானுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை‘

தோஹாவிலிருந்து சுருக்கமாக பேசுகையில் அவர் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பிரதான நகரங்களை கைப்பற்றிய போதும் தலைநகர் காபூலின் வாயில்களை அடைந்துள்ளனர். சக்திமிகு  மாற்றத்திற்காக நாங்கள் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

ஆப்கானிஸ்தானின்  பாமியன் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த உலகின் மிக உயரமான புத்தர் சிலை  2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலிபான்களால்  அழிக்கப்பட்டது. இந்த புராதன காலத்து சிற்பத்தை அழித்தமைக்கு கண்டனம் தெரிவித்த நாடுகளில் ஸ்ரீலங்காவும் அடங்கும். 

தலிபான்கள் மீண்டும் பலத்தைப் பெற்று இருப்பதால் பௌத்த பகுதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற பயம் பரவலாக ஏற்பட்டுள்ளது. தலிபான்கள் தலைமையிலான நிர்வாகத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று வலியுறுத்திக் கூறுகிறேன். இது தொடர்பான எந்த கூற்றுக்களையும் நான் மறுக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

தலிபான்களை ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளாகக் கருதக்கூடாது என்றும் அவர் சொன்னார். நாங்கள் விடுதலைப் போராளிகள். உங்களுடைய முன்னோர்கள் உங்கள் நாட்டின் விடுதலைக்காக எப்படி போராடினார்களோ அப்படி  போராடுபவர்கள். ஆனால் நாங்கள் விஷம பிரசாரம் காரணமாக  பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் வெளியேற்றத்தை அடுத்து கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானின் எல்லாப் பகுதிகளையும் சுமார் ஒரு வார காலத்தில் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.