தலிபானுடன் பிரித்தானியா பேச்சு

நேட்டோவுக்கு  உதவிய, அதேவேளை பிரித்தானியாவுக்கு வர தகுதியுள்ள பல ஆப்கானியர்கள் தலிபான்களின் கருணையால் அந்நாட்டிலேயே தங்கி இருப்பதாக நம்பப்படுவதால், அவர்கள் விடயத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் மிகுந்த அழுத்தத்துக்குள்ளாகியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து பிரித்தானிய பிரஜைகள் மற்றும் தம்முடன் பணியாற்றிய ஆப்கானிஸ்தானியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான முக்கியத்துவம் பற்றி காஸ், தலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளரொருவர் ஏ.எப்.பிக்கு   தெரிவித்தார்.

ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பின்னர், இலண்டனுக்கும் தலிபான்களுக்குமிடையிலான முதலாவது இராஜதந்திர சந்திப்பு இதுவாகும்.

இந்த வெளியேற்றத்தின்போது, அமெரிக்காவுடன் இலண்டனும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டோ படைகளுக்கு உதவிய 8, 000த்துக்கும் மேற்பட்டவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர்கள்  தம் நாட்டில் காலவரையறையற்று தங்குவதற்கு  அனுமதிக்கப்படுமென்றும் பிரித்தானிய அரசு தெரிவித்தது.

பெயரைக்குறிப்பிடாத ஒரு பிரித்தானிய அமைச்சர் கூறுகையில், யு.கே. 800க்கும் 1,000க்கும் இடையிலான மக்களை அந்த விமான பயணத்தில் இணைத்திருக்கலாம் என்று கூறினார்.

பைடனின் அரசு, அமெரிக்கப் படையினரின் வெளியேற்றத்தை ஓகஸ்ட் 31க்கு மேல் நீடிக்க, நினைத்திருந்த போதும், அது நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.