தீபாவளி இலக்கியக் கூடல் வைபவம்.

18.10.2025 சனிக்கிழமை மு.ப 9.00 மணிக்கு யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களது முன்னிலையில், தீபாவளி இலக்கியக் கூடல் வைபவம். நடைபெறவுள்ளது.

இதனை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசாரத் திணைக்களமும் இலங்கைக் கலைக்கழகமும் அரச இலக்கிய குழுவும் இணைந்து நடத்துகின்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகம் தேவையான முன்னெடுப்புகளை மேற்காள்கின்றது.

“நாங்கள் தேர்ந்தெடுத்த பாதைகளும் தேர்ந்தெடுக்காத பாதைகளும்’ எனும் தலைப்பில் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி ஆற்றிய 2025 அரச இலக்கிய பேருரையின் தமிழ்வடிவம் அடங்கிய நூல் வெளியீடு இடம்பெறவிருக்கின்றது. லேக்ஹவுஸ்-தினகரன் அனுசரணையில் இது வெளியாகிறது.

மேலும் கலைஞர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்குதலும் மூத்த எழுத்தாளர்களான கோபாலப்பிள்ளை கேதாரலிங்கம் மற்றும் அற்புதராணி காசிலிங்கம் ஆகியோருக்கான விசேட கௌரவிப்பும இடம்பெறும். நிகழ்ச்சியில் நூல் கண்காட்சி மற்றும் நூல் விற்பனையும் சிறப்பம்சங்களாக நடைபெறவிருக்கின்றன.

தெரிந்தெடுத்த ஐந்து நூலகங்களுக்கு நூல்கள் அமைச்சரால் இதன்போது அன்பளிப்பு செய்யப்படும்.முற்பகல் அமர்வில் கலாநிதி ந.இரவீந்திரனின் சிறப்புரையும் சிராஜ் மசூரின் இலக்கியகூடலுக்கான இலக்கிய உரையும் இடம்பெறவிருக்கின்றது.

மதியவுணவுக்கு பின்னர் ‘தோழமையின் எழுத்தாணி எனும் அரங்கில் வடக்கு-தெற்கு எழுத்தாளர் சந்திப்பும் எதிர்கால முன்னெடுப்பு குறித்த கலந்துரையாடலும் இடம்பெறவிருக்கின்றது.இதில் விரும்பிய அனைவருக்கும் கலந்துகொள்ள திறந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.