தெதுரு ஓயா, ராஜாங்கனை, இங்கினிமிட்டிய, தப்போவ மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (23 ) அன்று காலை நிலவரப்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
2 வான் கதவுகள் தலா 06 அடி வீதமும், 04 வான் கதவுகள் தலா 04 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன.
திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 19,400 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை மேலும் தெரிவித்துள்ளது.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகள் தலா 2 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன.
அந்த வான்கதவுகளிலிருந்து வினாடிக்கு 2,244 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது. அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் தலா 01 அடி திறக்கப்பட்டுள்ளன. அந்த வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 590 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
இதற்கிடையில், இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 01 அடி திறக்கப்பட்டுள்ளன.
அந்த வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 2000 கன அடி நீர்
மீ ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது. தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் தலா 2 அடி திறக்கப்பட்டுள்ளன.
அந்த வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 1,760 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில், குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த தேடுதல் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி வீதியிலுள்ள பஹல கடுகண்ணாவ மற்றும் மாவனெல்லவுக்கு இடையிலான பகுதியில் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.