நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயர் பரிந்துரை

இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு வந்த ட்ரம்பின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று, நோபல் குழு தெரிவித்துள்ளது.