பனாமா ஆவணங்களில் 53 பேர் இலங்கையர்

பனாமாவில் மொசெக் பொன்சேகா நிறுவனத்தில், வரி ஏய்ப்புச் செய்வதற்காக பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக கூறப்படும் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரிவினர்களில், இலங்கையைச் சேர்ந்த 53 பேரும் இருப்பதாக துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் அனைத்துலக பேரவை அறிவித்துள்ளது.

முன்னதாக அம்பலமாகாத இலங்கையர்களும் இதில், உள்ளடங்குவதாக பொன்சேகா சட்ட ஆலோசனை நிறுவனத்தில், 11.5 மில்லியன் ஆவணங்கள் வெளியாகியிருப்பதாகவும், கறுப்பு பணத்தை வெள்ளைப்பணமாக்குவதற்கும் நாடுகளின் சட்டங்கள் மற்றும் வரிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு இந்த நிறுவனம் உதவிபுரிந்துள்ளது.

இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் இலங்கையைச் சேர்ந்த 46 பேர், அந்நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டிருந்தனர் என்று தகவல் கசிந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.