பானுவையும் இளந்திரையனையும் புலிகளே சுட்டுக் கொன்றனர்!

ஆனந்தபுரத்தில் இராணுவத்தின் தாக்குதல் உக்கிரமாக இருந்ததனால் அதனை முறியடித்து பிரபாகரன் முல்லைத்தீவுக் காட்டிற்குள் தப்பிச் செல்ல கடும் யுத்தம் நடந்தது. ஆனால் இராணுவத்தின் தாக்குதலை புலிகளால் சமாளிக்க முடியவில்லை. ஆனந்தபுரத்தில் இராணுவத்தின் கடுமையான தாக்குதலில் புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட நூற்றுக் கணக்கான புலிகள் கொல்லப்பட்டனர்.

தீபன், கடாபி உட்பட பல புலிகளின் முக்கிய தளபதிகள் ஆனந்தபுபுரத்தில் கொல்லப்பட்டபோது புலிகளின் தளபதிகளான “பானு” “இளந்திரையன் ஆகியோர் அந்தத் தாக்குதலில் ஒரு காயமுமின்றித் தப்பிவிட்டனர். இதனால் பிரபாகரனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. பானு பொட்டம்மானால் கைது செய்யப்பட்டு 3 நாட்கள் பங்கருக்குள் சிறைவைக்கப்பட்டார். பின்னர் பிரபாகரனிடம் அழைத்துவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

புலிகளின் தளபதிகளுக்கு யுத்தம் செய்ய விருப்பமில்லை. இருந்தும் அவர்கள் யுத்தம் செய்தது பிரபாகரனுக்குப் பயத்தினால்தானே தவிர விசுவாசத்தினால் அல்ல.

புலிகளின் தளபதியான “பானு” எனப்படும் “சிவநாதன் சோமசேகரன்” தப்பிச் செல்ல விரும்பினார். ஆனால் இராணுவத்துடன் தொடர்பு கொள்ள அவருக்கு ஆங்கிலமோ சிங்களமோ தெரியாது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த “மார்சல்” எனப்படும் இராசையா இளந்திரையனுக்கு மொழிகள் தெரிந்திருந்தது. பானு, இளந்திரையனுடன் இணைந்து இராணுவத்தினர் பக்கம் தப்பிச்செல்ல முயன்றனர்.

இளந்திரையன் இராணுவத்துடன் செய்த உரையாடல் புலிகளினால் உற்றுக் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பிரபாகரனின் சந்தேகம் உறுதி செய்யப்பட்டு இளந்திரையனும் பானுவும் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்த உண்மை பல புலி உறுப்பினர்களுக்குத் தெரிந்தும் பிரபாகரனுக்குப் பயத்தினால் யாரும் உண்மையை வெளியில் சொல்லவில்லை. . இருந்து அங்கு இருந்த ஒரு புலியின் முக்கியஸ்தர் ஒருவரினால் இந்தச் செய்தி வெளியில் வந்தபோது அது இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டது. இப்போது வன்னியிலிருந்த முன்னாள் புலிகளினால் உண்மைகள் கசியத் தொடங்கியுள்ளன.

உண்மைகள் இன்னும் வரும்.