பேச்சு பல்லக்கு

இங்கிலாந்தின் கிங்ஸ்ரன் பகுதியுடன் யாழ் நகரை இணைநகராக்கியது தாமே என்று கொஞ்ச நாள் ஆரவாரம் தாங்கமுடியவில்லை. வடக்கு முதல்வரின் சாதனை என்று வேறு தற்குறி பிரச்சார ஊடகங்கள் ஆரவாரம் செய்தன. வெட்கக்கேடு என்ன வென்றால் இப்படியெல்லாம் இணைக்கப்பட்ட யாழ்மாநகரத்தில் நாளும் பொழுதும் நகரை துப்பரவு செய்யும் சுகாதாரப்பணியாளர்களான தொழிலாளர்கள் 297 பேர் 2009-2011 காலப்பகுதியிலிருந்து இற்றைவரை தற்காலிக ஊழியர்களாக பணி செய்கிறார்கள் இவர்கள் 9 நாட்களாக நிரந்தர நியமனம் கோரி போராடுகிறர்கள்.


கிங்ஸ்ரனுடன் யாழ்நகரை இணைக்கும் விடயத்தில் விழுந்தடித்து ஆரவாரம் காட்டிய முதலமைச்சர் இந்த உள்ளும் -உடனும் -அருகிலும் வாழும் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுயலவில்லை. மனமிரங்கவில்லை.. யாழ்நகரம் நாறுகிறது. பேச்சு பல்லக்கு.
இந்த விடயம் கிங்ஸ்ரன் நகருக்கு தெரியுமோ தெரியாது.
தொழிலாளர்கள் சாதாரண மக்களின் பிரச்சனைகள் இந்த பெரியமனிதர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதுபற்றிய பிரக்ஞையும் அற்றவர்கள் -பெரும்பாலான மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்.
மனமிருந்தால் இந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்குவது ஒன்றும் தலைபோகிற காரியமல்ல. மிகச் சாதாரணமான எளிமையான விடயம்

(Sritharan Thirunavukarsu)