பாராளுமன்றமும் நாளை கூடாது

புதன்கிழமைகளை அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளதால், நாளை (18) பாராளுமன்றத்தை  கூட்டப்போவதில்லை என பாராளுமன்ற தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற நாட்காட்டியின்படி புதன்கிழமை (18) பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட  தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில்  பொது சேவைகளுக்காக ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை தினமாக இருக்கும் என அரசாங்கம் ​திங்கட்கிழமை (16)  அறிவித்தது.