பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

விலை உயரும் வாய்ப்புள்ள பொருட்கள்:

எரிவாயு விலை அதிகரிப்பினால் பின்வரும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது:

  • வெதுப்பக பொருட்கள்: பாண் (Bread), பனிஸ் மற்றும் கேக் வகைகள்.
  • உணவக பொருட்கள்: சோற்றுப் பார்சல்கள் (Rice Packets).
  • சிற்றுண்டிகள்: ரோல்ஸ், பெட்டிஸ் உள்ளிட்ட ஏனைய சிற்றுண்டி வகைகள்.

உரிமையாளர்களின் நிலைப்பாடு:

தங்கள் தொழிலைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே விருப்பமில்லாத போதிலும் இந்த விலை உயர்வை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சர்வதேச ரீதியில் நிலவும் யுத்த மோதல்கள் காரணமாகவே எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என்பதால், இவ்விடயத்தில் அரசாங்கத்தைக் குறை கூறுவதில் பயன் ஏதுமில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.