போதைப் பொருள் வியாபாரம் ; மூவர் கைது

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் புதிய கிராமம் பகுதியில் போதைப் பொருள் வியாபாரம்  நூதனமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக  சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 28 வயதுடைய இரு சந்தேக நபர்களும் 25 ,40 வயது சந்தேக நபர்களும்   திங்கட்கிழமை(22) அன்று கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம்  கல்லரிச்சல் 04 பகுதி வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் புதிய கிராமம் பகுதி சம்மாந்துறை 03 பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

மேலும் அவர்களிடமிருந்து 2321 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள்,  380 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள்,  ஒரு தொகை பணம், 3 கையடக்கத் தொலைபேசிகள்,   3 பவர் பேங்க்,  3 வங்கி அட்டை  என்பன மீட்கப்பட்டிருந்தன.

மேலும் சந்தேக நபர்கள் உள்ளிட்ட  சான்றுப் பொருட்கள்  சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களில் மூவர்,  நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாகி இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.