மகேஸ்வரன் கொலையாளி யார்?

தனது முன்னாள் கணவர் மகேஸ்வரனைக் கொலை செய்த சூத்திரதாரி நாடாளுமன்றத்தில் இருப்பதாக திருமதி விஜயகலா ஜெயக்கொடி கூறியிருக்கிறார். மகேஸ்வரன் கொலையாளி பிடிபட்டு, சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார.; இந்த நிலையில் திருமதி ஜெயக்கொடி இப்படி கூறியிருக்கிறார். மகேஸ்வரன் புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்த அடிப்படையில் நடந்துகொள்ளாமல், புலிகளை புறக்கணித்ததால் அவர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றுதான் உறுதியாகி இருக்கிறது. மகேஸ்வரனைச் சுட்டுக் கொன்ற நபர் உடனடியாகவே பிடிபட்டும் உள்ளார். மகேஸ்வரனை புலிகள் கொன்றதால் தமக்கு துரோகிப் பட்டம் வந்துவிடுமென்று அஞ்சியே திருமதி ஜெயக்கொடி இதனை மறைத்து, வேறு நபர்கள் மீது குற்றஞ்சாட்டி வருவதாகக் கூறப்படுகிறது. பிடிபட்ட மகேஸ்வரனின் கொலையாளியின் கைத் தொலைப்பேசிக்கு இறுதியாக அழைப்பு கொடுத்தவர் மகேஸ்வரன் குடும்பம் சார்ந்த ஒரு பெண் என்று தெரியவந்துள்ளதாக அப்போது ஒரு செய்தி இருந்தது. யார் இந்தப் பெண் என்பது திருமதி ஜெயக்கொடி அறிவார். எனவே, இதனை வைத்தும் அந்த விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கலாம்தானே?