ஊர் காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கப்பட்டது
ரவைகளை மீட்டெடுப்பதற்கான. அனுமதியை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) கோரியதற்கு இணங்க ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவிற்கமைய ரவைகள் திங்கட்கிழமை (21) மீட்கப்பட்டன
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர் காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.