மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்களுக்கு ஈரான் குறி

இது குறித்து ஈரான் மதகுரு கொமேனி​யின் நெருங்​கிய உதவி​யாளர் ஹொசைன் ஷரி​யத்​மதர் கூறுகை​யில், “ஈரானின் அணுசக்தி தளங்​கள் மீது அமெரிக்கா அத்​து​மீறி தாக்​ககுதல் நடத்​தி​யுள்​ளது. இதையடுத்​து, சிறிதும் தாம​திக்​காமல் உடனடி​யாக எதிர்த்​தாக்​குதல் நடத்த வியூ​கம் வகுக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி மத்​திய கிழக்​கில் உள்ள முக்​கிய அமெரிக்க ராணுவத் தளங்​களை ஈரான் குறி​வைத்​துள்​ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்​படையை தாக்​க​வும், பிரிட்​டிஷ், ஜெர்​மனி, பிரெஞ்சு மற்​றும் அமெரிக்க கப்​பல்​களுக்கு ஹோர்​முஸ் ஜலசந்​தியை மூட​வும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.