மனம்பிட்டி நகரத்திற்கு பாரிய சேதம்

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மனம்பிட்டி கல்லேல்ல பகுதி  தொடர்ந்து நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவை , மணம்பிட்டி ரயில் நிலையமும் கடுமையாக சேதமடைந்துள்ளது, மேலும் மனம்பிட்டி நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு நவீன கார், ஒரு ஜீப் மற்றும் பல மோட்டார் சைக்கிள்களும் அடித்துச் செல்லப்பட்டதைக் காண முடிந்தது.

மனம்பிட்டி பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரங்களில் சிக்கிய நாய்களை, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீட்டுள்ளார்.