ஆனால், அவர்கள் எப்படி பார்க்கப்படுகிறார்கள்?
கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் வெயிட்டர் வேலை அல்லது பீங்கான் கழுவ ஆள் இல்லை என்றால் ‘ஹட்டனில் இருந்து ஒருவர் கிடைப்பாரா ஹோட்டல் வேலைக்கு’ என்று கேட்பார்கள். கொழும்பிலுள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்ய யாருமில்லை என்றால் ‘தலவாக்கலையில் தெரிந்தவர்கள் யாருமில்லையா, தோட்டத்தில் இருந்து தமிழ் சிறுமி ஒருவரை தேடிக்கொள்ள’ என்று கேட்பார்கள்.
அப்படியென்றால், தோட்டங்களில் பிள்ளைகள் வளர்வது கொழும்பு ஹோட்டல்களில் பீங்கான் கழுவவுமும், வீடுகளில் வேலை செய்யவுமா? அவர்கள் எங்களுடைய சகோதர சகோதரிகள் கிடையாதா?
அவர்களுக்கு என்று பொருளாதார ரீதியாக மட்டும்மல்ல, சமூக ரீதியாகவும் ஒரு நல்ல வாழ்க்கை கிடையாது. சமூகத்தில் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. சமூகத்திலும் அவர்களுக்கு மரியாதை இல்லை, புறக்கணிக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு உரித்தான தொழிலாக்கப்பட்டிருப்பது ஹோட்டல் வேலையும், வீட்டு வேலையுமா? இது நியாயமானதா? அவர்கள் எங்களுடைய சகோதர சகோதரிகள் கிடையாதா? அவர்களுக்கு இதை விட ஒரு நல்ல வாழ்க்கை வேண்டும்.
உழைத்து தேய்ந்து ஓடாகிப்போன உடம்பு; விறகு குச்சிகளை போன்ற கால்கள், சிரிப்பே இல்லாத காய்ந்து போன முகங்கள்; பிள்ளைகள் இருக்கிறார்கள் தலைமுடி, தோலில் எல்லாம் வெடிப்புகள், சரியான ஆடைகள் இல்லை, காலில் செருப்பு இல்லை. அவர்களும் எங்கள் நாட்டின் எங்களுடைய குழந்தைகள் தானே? எங்கள் நாட்டில் ஒரு குழந்தையேனும் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ வேண்டுமா? இது அப்படி இருக்க வேண்டிய நாடு கிடையாது.
நீண்ட காலமாக அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட அரசியல் கொள்கைகளாலும், பொருளாதாரக் கொள்கைகளாலும் மக்களை ஜடம் போன்று மாற்றியுள்ளார்கள். ஈரமில்லாதத, முகத்தில் புன்னகை இல்லாத, ரசனை இழந்த மக்கள். காய்ந்து போன, இரத்தம் வற்றிய மக்கள், கண்களில் குழிவிழுந்த மக்கள்.
இப்படி ஒரு நாடு எங்களுக்குத் தேவையா? இல்லை, இதை மாற்ற வேண்டும்.
ஆகவே, எங்களில் யாராலும் புறக்கணிக்க முடியாத ஒரு சமூக பொறுப்பு இருக்கிறது, ஒரு கடமை இருக்கிறது; அந்த மக்களுக்கு பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது எங்கள் பொறுப்பு!”