முன்னாள் ஜனாதிபதிகளின் மேலதிக தொலைபேசி மேலதிக இணைப்புகள் சலுகை நிறுத்தம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட நான்கு தொலைபேசிகளில் மூன்று தொலைபேசிகள் அகற்றப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு முன்னாள் ஜனாதிபதி தற்போது ஒரு தொலைபேசியை மட்டுமே வைத்திருக்கிறார். 

இந்த விடயம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணியாளர் ஒருவரிடம் நாம் வினவியபோது,

​​முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட நான்கு தொலைபேசிகளில் மூன்று தொலைபேசிகள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாகவும், அதிகாரப்பூர்வ வாகனங்களின் எண்ணிக்கையும் இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார். 

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு வசதிகளைக் குறைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமீபத்தில் முடிவு செய்தது. அதன்படி இந்த வசதிகள் அகற்றப்பட்டுள்ளன