முரண்பட்ட செய்திகள்

சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முனைப்புக்கள்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!!!!!

வடக்கு மாகாண முதலமைருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க சில தரப்புக்கள் முனைவதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுரேஸ் குறிப்பிட்டுள்ளதாவது, முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கும் முனைப்புக்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சியின் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வடக்கு மாகாண சபை தேர்தலின் போது, சி.வி.விக்னேஸ்வரனை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி கொண்டு வந்தார். அப்படியான ஒருவருக்கு எதிராக ஏனைய கட்சிகளின் அனுமதியின்றி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதென்பது கண்டிக்கதக்க விடயாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின், மேல் மட்டத்தவர்களின் அனுமதியுடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையினை கொண்டு வரப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்கள் பேரவை தோற்றுவிக்கப்பட்டதன் பின்னரே இந்த விடயத்தை குறித்த தரப்பு முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.” என்று கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது: சி.வி.விக்னேஸ்வரன்!!!!!!

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் தனக்கு எதும் தெரியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சரிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற செய்தியை மறுக்கிறார் அவைத் தலைவர்!!!!!

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் அடுத்துவரும் ஒரு சில வாரங்களில் அது வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் வெளியான செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான செய்தி குறித்து ‘மலரும்’ இணையம் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது- “முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீமானம் கொண்டுவரப்படப் போவதாக வெளியான செய்தி குறித்து நானும் அறிந்தேன். அந்தச் செய்தியில் எதுவித உண்மைத் தன்மையும் இல்லை. “ஏனெனில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை அமர்வு நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்பட்டு விட்டது.

அந்த நிகழ்சி நிரலில் முதலமைச்சருக் எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து எதுவும் இடம்பெறவில்லை. அத்துடன் கட்சித் தலைமையோ கட்சியோ இது குறித்த தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை” – என்றார். அத்துடன் இந்தச் செய்தி எந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டதென்பது எனக்கு புரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.