மேர்வின் சில்வா, பிரசன்னவின் விளக்கமறியல் நீடிப்பு

மஹர நீதவான் நீதிமன்றம் இன்று இருவரையும் மேலும் மூன்று சந்தேக நபர்களையும் 2025 மே 26 வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

கிரிபத்கொடையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மார்ச் மாதம் பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, மே 07 அன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.