யாழில் போதையை வலை விரித்துப் பிடித்த பொலிஸார்

வேலணை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 கைது செய்யப்பட்டுள்ள போதை வியாபரிகளிடமிருந்து போதைப்பொருளை வாங்குபவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 இருவரது உடைமையில் இருந்தும் 2கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின்  , 12 கிராம் ஐஸ் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தமக்கு நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த போதை வியாபாரி ஒருவரே போதைப்பொருளை விநியோகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த போதை வியாபாரியை கைது செய்த பொலிஸார்     போதைப்பொருளை வாங்குபவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.