குறித்த நூலகம் பொது மக்கள் பாவனைக்காக ரில்வின் சில்வா தோழர் மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் தோழர் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நூலகமானது கம்யூனிசம், சோசலிசம், மொழியியல், வரலாறு, அரசியல் விஞ்ஞானம், சமூகவியல், புவிச்சரிதவியல், மருத்துவம், பொறியியல், விவசாயம், பண்பாடு, முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, ஆன்மீகம், உளவியல், கல்வியியல், சூழலியல், தூய விஞ்ஞானம், பிரயோக விஞ்ஞானம், தர்க்கவியல், புள்ளிவிபரவியல், கணிதம், கலை, பொருளியல், ஊடகவியல், தத்துவவியல், கைத்தொழில், மனையியல் எனப் பல்துறைசார் சுமார் 2000 வரையான நூல்களை உள்ளடக்கியதாக இன்று திறக்கப்பட்டுள்ளது.
குறித்த நூலகம் இன்று பலரது இணைந்த பங்களிப்புகளால் ஆரம்பமாகியுள்ள நிலையில் மேலும் பல ஆயிரம் நூல்களைச் சேகரித்து 4000 நூல்களைத் தன்னகத்தே கொண்டதாக 2025 ற்குள் செயற்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.மேலும், விரைவில் இணையவசதியுடன் கூடிய சுய கற்றல் வசதிகளை நூலகத்தில் ஏற்படுத்திக்கொடுக்கத் திட்டமிடப்படுகிறது.
இதன்மூலம் பல்தேவையுடைய வாசகர்களிற்கும் சேவையை வினைத்திறனாக விரிவாக்கி வழங்கமுடியுமென நம்புகிறோம்.குறிப்பாகச் சிறார்களிற்குக் கற்றலிற்கான கற்றல் அனுபவத்தை வழங்க வேண்டிய தேவை காலத்தால் உணர்த்தப்படும் நிலையில் இம்முயர்ச்சி அத்தேவையை நிறைவேற்ற ஒரு அடிக்கல்லாக அமையட்டும்.மெய்ப்பொருள் காண்பது அறிவு..மெய்ப்பொருழ் உணர்வது ஞானம்