இந்த விவகாரம் குறித்து பாராளுமன்ற விவாதங்களிலும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இவர்கள் துணிச்சலுடன் ஆணித்தரமாகவும் ஆக்கபூர்வமாகவும் கருத்துக்களை முன்வைத்து, அழுத்தம் வழங்கியிருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு குறித்த வர்த்தமானியை இரத்துச் செய்யும் விவகாரத்தில் வழங்கிய காத்திரமான பங்களிப்பை பாராட்டி நன்றிகளை தெரிவித்துள்ளார்.