இதற்கிடையே கடந்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்க்யாங் இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் இதன் பயண நேரம் சுமார் 10 நாட்கள் ஆகும்.
இதனால் நேரடி விமான சேவை தொடங்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வந்தன. அந்தவகையில் தற்போது மாஸ்கோ-பியாங்க்யாங் இடையே நேரடி விமான சேவை நேற்று தொடங்கியது. இந்த விமானம் வாரத்துக்கு 2 முறை இயங்கும் என ரஷிய விமான போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா தெரிவித்துள்ளது.