வடகிழக்கு மாகாணசபையும் வரதராஜப்பெருமாளும்.!

அதில் இந்தியப்படையின் ஆதரவில் இயங்கிய ஈபிஆர்எல்எஃப் இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி , ரெலோ, புளட், ஈரோஸ், இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.

கிழக்கில் மட்டும் ஈபிஆர்எல்எவ்வுடன் ஶ்ரீலஙகாமுஸ்லிம் காங்கிரஸ், ஐக்கியதேசிய கட்சி, ஈஎன்டிஎல்எவ்,போட்டியிட்டது

கிழக்கு மாகாணத்தில் ஈபிஆர்எல்எவ் செவ்வரத்தம் பூ சின்னத்தில் போட்டியிட்டு 215230, வாக்குகளை பெற்று 17, ஆசனங்களையும்,
ஶ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் 17, ஆசனங்களையும், ஜக்கியதேசிய கட்சி 01, ஆசனத்தையும் பெற்றது, ஈஎன்டிஎல்எவ் எந்த ஆசனமும் பெறவில்லை.
மொத்த ஆசனங்கள் 35

வடக்கில் ஈபிஆர்எல்எவ் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது வேறு எந்த கட்சிகளும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யாமையால் தேர்தல் நடத்தாமலேயே ஈஎன்டிஎல்எவ் கட்சியையும் இணைத்து போட்டியிடாமையால் ஆசனங்களை பகிர்ந்து 24, ஆசனங்கள் ஈபிஆர்எல்எவ் , 12ஆசனங்கள் ஈஎன்டிஎல்எவ் வழங்கி வடமாகாணத்தில் 36 ஆசனங்களை பெற்று வடகிழக்கில் மொத்தம் (35+36=71) 71,ஆசனங்களில் அதிகப்படியாக ஈபிஆர்எல்எவ் 41,ஆசனங்களுடன் வரதராஜப்பெருமாள் முதலமைச்சரானார்.

வரதராஜப்பெருமாள் 1988, நவம்பர்,19, தொடக்கம் 1990, மார்ச்,01, வரையும் மட்டும் அதாவது 01 வருடம் 03 மாதம் 12 நாள் மட்டுமே முதலமைச்சர் என்ற பதவியில் இருந்தார்.

1990, மார்ச் 01 ல் அவர் இந்தியப்படையுடன் கப்பலில் திருகோணமலையில் இருந்து பிற்பகல் தப்பி செல்வதற்கு முன்னம் அன்று காலை 10 மணிக்கு திருகோணமலையில் இறுதி அமர்வு இடம்பெற்றபோது தமிழீழத்தை பிரகடணம் செய்து உரையாற்றிவிட்டே சென்றார்.

1990 மார்ச் 02, ஜனாதிபதி ஆர். பிரேமதாசா தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி வடகிழக்கு மாகாணசபையை உடனே கலைத்து, மத்திய அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.

இந்தியா சென்ற வரதராஜப்பெருமாள் சிறிது காலம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாழ்ந்த பின்னர் ராஜஸ்தானில் இந்திய அரசின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார். 2009 மே 18 ல் முள்ளிவாய்க்காலில் போர் மௌனித்த பின்னர் 2010 மார்ச் 29 ல் 20 வருடங்கள் கடந்த பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்தார்.

இதுதான் வரதராஜப்பெருமாளின் வரலாறு.

மத்திய அரசின் கீழ் இணைந்த மாகாணசபை ஆளுநர் ஊடாக 2006 அக்டோபர் 16 வரை இணைந்த வடகிழக்கு மாகாணசபை ஆளுநரின் நிர்வாகத்தில் இயங்கியது.

2006 யூலை 14 ல் ஜே வி பி இணைந்தவடகிழக்கு பிரிப்புக்கு எதிராக கொழும்பு உச்ச நீதிமன்றில் வழக்கை தாக்கல்செய்தமையால் அதன் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக 2006 அக்டோபர் 16 ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

2006 அக்டோபர் 16 ல் இலங்கையில் எட்டு மாகாணசபையாக வர்தமானியில் வெளியிடப்பட்ட மாகாணசபைகள் 09 மாகாணசபை என கிழக்குமாகாணசபை தனியாகவும் வடக்கு மாகாணசபை தனியாகவும் வெளியிடப்பட்டு அவசர அவசரமாக கிழக்கு மாகாணசபைக்கு தேர்தல் 2008 மே 10 ல் நடத்தப்பட்டு பிள்ளையானை முதலமைச்சராக ஜனாதிபதி மகிந்த அறிவித்தார்.

இதுதான் வடகிழக்கு மாகாணசபையின் வரலாறு.

-பா.அரியநேத்திரன்-
18/10/2025