விசாரணைகளில் நம்பகத்தன்மையையே ஐ.நா விரும்புகிறது?

போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மையான விசாரணைகளின் மூலம், சிறிலங்கா அரசாங்கம் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதையே ஐ.நா விரும்புவதாக ஐ.நா. பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நேற்றுமுன்தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ”சிறிலங்காவில் முறையான விசாரணைகளின் மூலம் நல்லிணக்கம் மற்றும் இருதரப்பு பொறுப்புக்கூறலின் ஊடாக உண்மையான மறுசீரமைப்பிற்கு சிறந்த சந்தர்ப்பமாக தற்போதைய சூழல் அமைந்துள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் விசாரணைப் பொறிமுறையை முன்னெடுக்கவுள்ள நிலையானது சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.