விதிகளை ஏற்க கூகுள் ஆயத்தம்

இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு, புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்க தயார் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக ஊடகங்களான ‘டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டர்கிராம்’ போன்ற நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தலைமை நடவடிக்கை அதிகாரி, சிறப்பு பணி தொடர்பு நபர், உள்ளுறை குறைதீர் அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல புதிய விதிகளை மத்திய அரசாங்கம் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி வெளியிட்டது. இந்த விதிகளுக்கு இணங்கிச் செயல்பட சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டது. ‘விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.