வெனிசுவேலா எதிரணியில் பிளவு

வெனிசுவேலாவில் அண்மையில் நடத்தப்பட்ட, ஆளுநர்களுக்கான தேர்தல்களின் வெற்றிபெற்ற, எதிரணியைச் சேர்ந்தவர்களின் 4 பேர், அந்நாட்டின் சர்ச்சைக்குரிய அரசமைப்புச் சபைக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வளவு நாட்களும், அச்சபை, சட்டத்துக்குப் புறம்பானது என, அவர்கள் குற்றஞ்சாட்டி வந்த நிலையிலேயே, தற்போது அவர்கள், சபைக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடைபெற்ற தேர்தல்களில், எதிரணி சார்பில் 5 பேர் வெற்றிபெற்றிருந்தனர். வெனிசுவேலாவின் முன்னைய சட்டத்தின்படி, மாநிலங்களின் ஆளுநராகத் தெரிவுசெய்யப்படுவோர், தமது பிராந்திய சபைக்கான ஆதரவை வெளிப்படுத்துவதே அவசியமானது. ஆனால் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, நாட்டின் அரசமைப்புச் சபைக்கான ஆதரவை வெளிப்படுத்துவதும் அவசியமானது.

இந்நிலையிலேயே, தெரிவுசெய்யப்பட்டோரில் 4 பேர், தற்போது பதவியேற்றுள்ளனர். ஒருவர் மாத்திரம், இவ்வாறு அரசமைப்புக்குச் சபைக்கான ஆதரவை வெளிப்படுத்தி, பதவியேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். பதவியேற்ற ஆளுநர்களின் ஒருவர், நீண்டகால நன்மைகளைக் கருத்திற்கொண்டு, இவ்வாறு பதவியேற்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.